சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு

சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு
X

பைல் படம்.

வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இன்று மீட்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இதனை அவனது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் அந்த மாணவன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டான். மாணவனை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் அவனது பெற்றோர் தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மாணவன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தான். அவனை பிடித்து விசாரித்தபோது அந்த மாணவன் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த தாராபுரம் மாணவன் என தெரிய வந்தது. இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அந்த மாணவனின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, அவர்களை வரவழைத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோர் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்