பவானி அருகே அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

மாணவி வர்ஷா.

Latest Suicide News -பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Latest Suicide News - ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், திருச்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகள் வர்ஷா (வயது 20) 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த இவர் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றவர் திடீரென அங்குள்ள மின் விசிறி கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முருகேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கல்லூரி கல்லூரி முதல்வர் சித்தோடு காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வர்ஷா தங்கி இருந்த விடுதி அறையையும் போலீசார் சோதனையிட்டனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story