கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலி

கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி கல்லூரி மாணவர்  பலி
X

உயிரிழந்த மாணவன் யோகேஷ்.

கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாணவர் யோகேஷ் (வயது 18). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் லிஜு என்ற மாணவனும் படித்து வருகிறார். அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவ நண்பர்களுடன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் 6 பேரும் நேற்று குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு மாணவர்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யோகேஷ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். மாணவர் லிஜு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!