அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை உடையும் அபாயம்

அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை உடையும் அபாயம்
X

 உபரி நீர் வெளியேறும் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகள்.

அந்தியூர் அருகே உள்ள கெட்டிச்சமுத்திரம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால், வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இங்கு திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழையால் எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி , வேம்பத்தி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.


இந்நிலையில், கெட்டிசமுத்திரம் உபரி நீர் வெளியேறும் பகுதியில் நேற்று இரவு யாரோ சிலர் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறாமல் ஏரியில் தேங்கியுள்ளது.

இதனால் ஏரியில் நீரின் அழுத்தம் அதிகமாகி ஏரியின் கரை பலவீனமாகி ஏரிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!