கோபி அருகே மாநில அளவிலான கபாடி போட்டி: அந்தியூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு

கோபி அருகே மாநில அளவிலான கபாடி போட்டி: அந்தியூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
X

டி.என்.பாளையத்தில் மாநில அளவிலான கபாடி போட்டியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையத்தில் மாநில அளவிலான கபாடி போட்டியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் சிவசக்தி நகரில் உதயமலர் கபாடி குழுவின் சார்பில், மாநில அளவிலான கபாடி போட்டி இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இரவு பகல் என பாராமல் இரண்டு ஆடுகளத்தில் பல்வேறு கட்டங்களாக, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 190 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றார்.

முதல் நாள் தொடங்கிய போட்டியினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். இதில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future