ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பணியாளர் அமைப்பு தின கொண்டாட்டம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பணியாளர் அமைப்பு தின கொண்டாட்டம்
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர் அமைப்பு தின நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பணியாளர் அமைப்பின் சார்பில் பணியாளர் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

ஈரோடு திண்டல் அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் பணியாளர் அமைப்பின் சார்பில் பணியாளர் அமைப்பு தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இப்பணியாளர் அமைப்பு தினத்தை முன்னிட்டு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னதாக மருத்துவ முகாமிற்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். இம்மருத்துவ முகாமில் ஈரோடு கொங்கு நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் தனுஷியா இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை உணவு பற்றி எடுத்துரைத்தார். ஈரோடு ஸ்மைல் ஈஸி மருத்துவமனை மருத்துவர் தமிழ் அன்பு பல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.


ஈரோடு பி வெல் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் பெண்கள் தங்களது உடல்நலத்தை எவ்வகையில் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். ஈரோடு வாசன் மருத்துவமனையின் கண் பராமரிப்பு நிபுணர் சந்தோஷ் அவர்கள் கண் பாதுகாப்பு மற்றும் கண்களுக்கான எளிய சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஈரோடு வாசன் கண் மருத்துவமனையைச் சார்ந்த ராம்குமார் மருத்துவ ஒருங்கிணைப்பாளராக இருந்து செயலாற்றினார்.

இவ்விழாவின் இறுதியாக கொங்கு கலை அறிவியல் கல்லூரி பணியாளர் அமைப்பின் செயலாளர் அழகப்பன் நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் பணியாளர் அமைப்பின் பொருளாளர் சுரேஷ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர் அமைப்பின் உறுப்பினர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!