பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு

பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு
X

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

ஒமிக்ரானுக்கு சிகிச்சை அளிக்க பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து, ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 10 படுக்கைகள் ஒமிக்ரான் தொற்றுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, பெருந்துறை மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 10 படுக்கைகள் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்காக தனியாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!