/* */

கவுந்தப்பாடியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பவானி அடுத்த கவுந்தப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

தன்னாசிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி ஊராட்சி வேலம்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட தன்னாசிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஈரோடு கோழி நோய் ஆராய்ச்சி உதவி இயக்குநர் சேகர், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் திலக் , சரவணகுமார், யுவராஜ் , தனராஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை ஆய்வாளர் சித்தன் , உதவியாளர் செந்தில் குமார் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை , குடற்புழு நீக்கம்,ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல்,மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை,சிறு அறுவை சிகிச்சை,தாது உப்பு கலவை சிறு கண்காட்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் கால்நடை தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆலோசனை அளிக்கப்பட்டது. முகாமில், கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் சுமார் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டன.

Updated On: 7 Jan 2022 3:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்