அந்தியூர் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

அந்தியூர் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

சிறந்த கால்நடைகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

பாலக்குட்டையில் நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் முகாமை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையம் ஊராட்சியில் உள்ள பாலக்குட்டையில், இன்று காலை, அந்தியூர் வட்டார கால்நடைத்துறை சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு, கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது, திமுக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய வரும் நிலையில், விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார். இந்த முகாமில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர், சிறப்பான முறையில் கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகளை பாராட்டினார்.

மேலும், கால்நடைகளுக்கு சினை ஊசி, சினை பரிசோதனை உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கால்நடைத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்