அந்தியூரில் தேமுதிக தலைவர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை

அந்தியூரில் தேமுதிக தலைவர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை
X

அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூர் தம்பிகலைஐயன் கோவிலில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி, மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அந்தியூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியினர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்‌. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தேமுதிகவினர் சார்பில், நேற்று இரவு, அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூர் தம்பிகலைஐயன் கோவிலில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி, மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேமுதிகவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் ஒன்றிய தேமுதிக செயலாளர் ஈ.சுதாகர், அவைத்தலைவர் ஜே பி ரமேஷ் குமார், ஒன்றிய பொருளாளர் துரைசாமி, ஊராட்சி செயலாளர்கள் கொடி மோகன் கனகராஜ் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future