பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
X

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வீடியோ காட்சி.

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஆடு திருடிய நபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரது வெள்ளாட்டை திருடிய போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் (வயது 41) என்பவர் பிடிபட்டார். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆடு திருடிய குமாரை பொதுமக்கள் முன்னிலையில், பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார்.

இதனை அங்கிருந்த, அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலானதால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story