அந்தியூர் நகர பாமக சார்பில் தவிட்டுப்பாளையத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

அந்தியூர் நகர பாமக சார்பில் தவிட்டுப்பாளையத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
X

பாமக சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்.

அந்தியூர் நகர பாமக சார்பில் பேரூராட்சித் தேர்தலை முன்னிட்டு தவிட்டுப்பாளையத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில், வேட்பாளர்களை நிறுத்த திமுக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட தவிட்டுப்பாளையத்தில், அந்தியூர் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம், நகரச் செயலாளர் மாதேஷ், நகர தலைவர் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் செங்கோட்டையன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும், வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!