பவானி: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

பவானி: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
X

பைல் படம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

ஈரோடு மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் ஞானசேகரன், பவானி பகுதியில் வர்ணபுரம், அண்ணா நகர், ஊராட்சிக்கோட்டை, எலவமலை ஊராட்சி மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மனுதாரரின் வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அவருடன் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!