ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையும் , நாளை மறுநாளும் சிறப்பு முகாம்
வாக்காளர் சிறப்பு முகாம் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக நாளை (23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ம் தேதி) (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெற, இச்சிறப்பு முகாமினை வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu