பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற ஏப்ரல் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மற்றும் 14ம் தேதி மறுபூஜை விழாவும் நடக்கிறது .

இதை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தி, புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
ai solutions for small business