விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
X
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்.6,7,8 ஆகிய நாள்களில் ஈரோட்டில் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற 6ம் தேதி (வெள்ளிகிழமை), 7ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த தினம் ஆகிய நாட்களில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எனவே, இவ்வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story