பொங்கல் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 240 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை:  ஈரோடு மாவட்டத்தில் 240 சிறப்பு பஸ்கள் இயக்கம்
X
ஈரோடு மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து நாட்களுக்கு 5 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கல் பண்டிகை கொண்டாட, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் குவிந்தனர்.

பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில், நேற்று இரவு முதல், சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரவு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை, சென்னை போன்றஊர்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதை தொடர்ந்து இன்று இரவு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல், நாளை இரவும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா