அந்தியூரில் சிறப்பு இரத்த தான முகாம்: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு

அந்தியூரில் சிறப்பு இரத்த தான முகாம்: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு
X
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு இரத்த குறைபாடோடு இருப்பதால் அவர்களின் தேவைக்காக இந்த சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமை, அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கவிதா, மருத்துவர் சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இம்முகாமில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இவர்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் ஈரோடு அரசு இரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பெற்று சென்று பத்திரப்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!