பவானி அருகே தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

பவானி அருகே தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
X

கைது செய்யப்பட்ட மாதப்பன்

பவானி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால், தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி - மேட்டூர் ரோடு சித்தார் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 70) இவரது மனைவி இருசாயி (வயது 70). இவர்களுடைய மகன் மாது (எ) மாதப்பன் (வயது 40). இவர் தனது தந்தையிடம் 2 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். இந்நிலையில் தனது மகனிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு பெற்றோர் கேட்டுள்ளனர்.இதற்கு மகன் மாதப்பன் உனக்கு எதுக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் மூவருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்பொழுது மகன் மாதப்பன் தந்தையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டலும் விடுவித்தார். மேலும் மாதப்பன் கெட்ட வார்த்தையால் பேசி தனது தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படு காயமடைந்த முத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைப் பற்றி தகவல் அறிந்த பவானி காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!