ஈரோட்டை பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வல தம்பதிகள்

ஈரோட்டை பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் சமூக ஆர்வல தம்பதிகள்
X

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பசுமையாக மாறி வருவதை படத்தில் காணலாம்.

ஈரோட்டை பசுமையான அழகான மாநகரமாக மாற்றும் முயற்சியில் சமூக ஆர்வலர்களான கணவன் - மனைவி இருவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உட்பட பல்வேறு மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓரங்கள், ரவுண்டானாக்கள் ஆகிய இடங்களில் புல் தரைகள் மற்றும் அழகான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதுபோல, ஈரோடு மாநகரிலும் சாலை ஓரங்கள், ரவுண்டாணாக்கள் போன்ற இடங்களில் புல்கள் மற்றும் அழகான செடிகள் நட்டு ஈரோடு மாநகரை பசுமையான மாநகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியில், ஈரோடு சமூக ஆர்வலர் குணசேகரன், அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குணசேகரன் ஓய்வு பெற்ற விவசாயத்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவியும் விவசாயம் தொடர்பாக படித்து பட்டம் பெற்று உள்ளார். கணவன் - மனைவி இருவரும் ஈரோடு மாநகரை பசுமை மாநகரமாக மாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானா, குமலன்குட்டை ரவுண்டானா, ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள டீசல் செட் மற்றும் எலக்ட்ரிக் லோகோ செட் போன்ற இடங்களில் உள்ள ரவுண்டானா மற்றும் சென்டர் மீடியாக்களில் புல்கள் மற்றும் அழகிய செடிகள் நட்டும் பராமரித்து வருகிறார்கள்.

இது மட்டும் அல்லாமல் இன்னும் பல இடங்களில் அவர்கள் அழகான செடிகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் ஈரோடு மாநகரம் பசுமையாக காட்சியளிப்பதுடன் மாசு இல்லாமல் சுற்றுப்புற சூழலும் பாதுகாப்புடன் இருக்க இருக்கும் என்று குணசேகரன் மற்றும் செந்தாமரை கூறுகிறார்கள்.

இது பற்றி அவர்கள் கூறும்போது, சாலை ஓரங்கள் மற்றும் ரவுண்டானாக்கள் போன்ற இடங்கள் அழகாக காட்சி அளிப்பதற்காக புல்கள் மற்றும் அழகிய செடிகள் நடப்பட்டு வருகின்றன. இதனால் இந்த இடங்கள் பசுமையாக காட்சியளிப்பதுடன் சிறிய பூங்கா போலவும் காட்சியளிக்கும். புல்கள் மற்றும் செடிகள் நடும் பணியிலும் அவைகளை பராமரிக்கும் பணியிலும் சுமார் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த செடிகளுக்கு இப்போது லாரிகள் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் இந்த செடிகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் விடுவதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மேலும் அந்த இடங்களில் போதிய மின் விளக்கு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு அந்த இடங்களில் தூங்குவது மற்றும் அசிங்கமான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கூறினர்.

இது மட்டுமல்லாமல் இவர்கள் ஈரோடு அசோகபுரத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் ஆதரவற்றோர் மூளை வளர்ச்சியற்றோர் போன்ற இடங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். லோட்டஸ் கார்டன்ஸ் என்ற பெயரில் நர்சரி நடத்தி வரும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கு இலவசமாக பல்வேறு வகையான செடிகளையும் வழங்கி உள்ளனர்.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?