ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 21.51 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 19-ந் தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 865 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தினமும் ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 21 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!