அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு

அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு
X

பிடிபட்ட பாம்புடன் வனத்துறையினர்.

அந்தியூர் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு பாத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருப்பதை கண்ட ராமர், இது சம்பந்தமாக அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், சென்ற தீயணைப்பு துறை வீரர்கள், பாம்பு பிடிக்க பயன்படுத்தும் கருவியின் உதவியுடன், சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு, வனத்துறை அதிகாரிகளிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாம்பை வரட்டுப்பள்ளம் அணை வனப் குதியில், வனத்துறையினர் விட்டுச் சென்றனர்.

Tags

Next Story