/* */

கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது

பெருந்தலையூரில் ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 660 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது
X

கைது செய்யப்பட்ட அழகரசன்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமை பொருள், கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் பெருந்தலையூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சோதனை செய்ததில், 22 மூட்டைகளில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்திய பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகன் அழகரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அரிசி மூட்டைகளுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!