ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
X
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்ரல் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும்,விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story
Similar Posts
ஈரோட்டில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி!
ஜீவனாம்சம் பெற வரலட்சுமியின் தொடர் போராட்டம்
என்ன சொல்ரீங்க,  பப்பாளியுடன் சேர்த்து இதெல்லாம் சாப்பிடக் கூடாதா ?
எஸ்.ஐ. தாக்குதலுக்கு எதிராக 970 வக்கீல்கள் கண்டனம்
பவானி: அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம்!
மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்த  கலெக்டர்
தமிழக அளவில் வரி வசூலில் ஈரோடு மாநகராட்சிக்கு 3வது இடம்: 58 அலுவலர்களுக்கு பாராட்டு!
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
அரசு வேலைக்கு இலவச படிப்பு
பட்ட பகலில் வீடு புகுந்து திருடிய பெண் கைது
தசைகளின் தோழன் – புரோட்டீன் உணவின் முக்கியத்துவம்
மதுபான கடையை எதிர்த்து பொது மக்கள் எதிர்ப்பு
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் தொடக்கம்