ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் மே.16ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற மே.16ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற மே.16ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu