பவானியில் தனியார் யூடியூப் சேனலை கண்டித்து, சிவனடியார்கள் பாராயணம்

பவானியில் தனியார் யூடியூப் சேனலை கண்டித்து, சிவனடியார்கள் பாராயணம்
X

சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் பாராயணம் நடைபெற்ற போது எடுத்த படம்

நடராஜ பெருமானை அவதூறாக சித்தரித்து வெளியிட்ட தனியார் யூடியூப் சேனலை கண்டித்து, சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கூட்டுப் பாராயணம் நடைபெற்றது.

தனியார் யூடியூப் சேனல் ஓன்று நடராஜ பெருமாளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவதூறாக சித்திரித்து கருத்து வெளியிட்டது. இதற்கு சிவனடியார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் மற்றும் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் கோரிக்கை வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் நடராஜ் பெருமாளிடம் முறையிடும் வகையில் கூட்டு பாராயணம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று திருமுறை பாடல்கள் பாடி அறவழியில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து சிவனடியார்கள் மனம் வேதனைப்படும் வகையில் கருத்து வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மத நம்பிக்கை வைத்து அவதூறு பேசும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!