அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்

அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்
X

சேதமடைந்த நெற்பயிர்கள்.

அந்தியூர் அருகே நெல் வயலை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தோணிமடுவு, வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் அணை, காக்காயனூர் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வட்டக்காடு பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரது தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, அவர் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களை சாப்பிட்டும் மிதித்தும் சேதப்படுத்தியது.

இதேபோல், கிழங்குகுளி அருகே உள்ள சூரி தோட்டத்தில் புகுந்த யானை, அங்கு பயிரிட்டு இருந்த கரும்பு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை விவசாயிகள் தோட்டத்தில் வந்தபோது, யானை சேதப்படுத்திதை கண்டு கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறையினர இரவில் யாரும் தனியாக வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail