தி.மு.க. நெசவாளர் அணி மாநில செயலாளராக சிந்து ரவிச்சந்திரன் நியமனம்

சிந்து ரவிச்சந்திரன்.
Sindhu Ravichandran-கடந்த 1989ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் வார்டு செயலாளர், கோபி 2வது வார்டு நகராட்சி கவுன்சிலர், கோபி நகர செயலாளர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர். மாவட்ட பேரவை செயலாளர், 2 முறை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழக தலைவர் மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் சிந்து ரவிச்சந்திரன் பணியாற்றி உள்ளார். இவர் மாவட்ட செயலாளராக இருந்த போது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் கொடிக்கம்பம் அமைத்துக் கொடுத்தார். மாவட்டத்திலுள்ள அனைத்து சார்பு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகளை பொறுப்புகளில் நியமித்தார்.
மாவட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் பல்வேறு புதிய நிர்வாகிகளை இணைத்து பொறுப்புகள் கிடைக்க வழி செய்தார். கடந்த 32 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வந்தும், அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்ததால் அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார்.
மேலும் இவருடன், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, டி . என் . பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் 3 பேர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஆர். கந்தசாமி, கோபி நகர செயலாளர் பி. கே.காளியப்பன், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. வரதராஜ், ஈரோடு புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி. ரமேஷ் உள்பட பலர் வீட்டு வசதித்துறை அமைச்சரும். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆகியோர் முன்னிலையிலும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர் தி.மு.க.வில் இணைந்த பின்பு நடை பெற்ற மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத் தேர்தலில் இவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தி. மு.க. வேட்பாளர் வெற்றி பெற அயராது பாடு பட்டார். இவருடன் ஏற்கனவே 3 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இணைந்ததால் அதன் பிறகு நடைபெற்ற ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 73 ஆண்டுகளுக்கு பிறகு கோபி நகராட்சியை முதன் முறையாக தி.மு.க. கைப்பற்றி வெற்றி பெறுவதற்கு சிந்து ரவிச்சந்திரன் உறு துணையாக இருந்தார். தற் போது இவரது களப்பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தி.மு.க.வில் இணைந்த ஒன்றை ஆண்டுகளிலேயே மாநில நெசவாளர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu