நோபல் உலக சாதனைக்காக 5 கி.மீ தூரம் சிலம்பாட்ட மாரத்தான்

நோபல் உலக சாதனைக்காக 5 கி.மீ தூரம் சிலம்பாட்ட மாரத்தான்
X

நோபல் உலக சாதனைக்காக 5 கி.மீ தூரம் சிலம்பம் சுற்றி சென்றனர்.

கோபிசெட்டிபாளையத்தில் நோபல் உலக சாதனைக்காக 5 கி.மீ தூரம் சிலம்பாட்ட மாரத்தான் போட்டியில் 120 வீரர்கள் சிலம்பம் சுற்றி சென்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிலம்பாட்ட குழு சார்பில் நோபல் உலக சாதனைக்கான சிலம்பாட்ட போட்டி கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 120 சிலம்ப வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலம்பம் வீரர்கள் நாய்க்கன்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து கோபி பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட், கச்சேரிமேடு, ல.கள்ளிப்பட்டி, லக்கம்பட்டி வழியாக கோபி-சத்தி சாலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வரை சிலம்பம் சுழற்றிச்சென்றனர்.இந்த 5 கிலோ மீட்டர் தூர சிலம்ப மராத்தான் போட்டிக்கு 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிலம்பம் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில் அதிகளவில் மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil