கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
X

கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு, கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

நீட் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தி கவுந்தப்பாடி, கோபி, பவானி, பெருந்துறை பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்.

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, கோபி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பாக, நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தும், ஏழை எளிய மாணவ மாணவிகளின் மருத்துவ கனவை நனவாக்கும் நீட் தேர்வை வரவேற்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தினை, இன்று கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் மாவட்ட செயலாளர் இந்து சபரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன், கவுந்தப்பாடி நகரச் செயலாளர் தயானந்தன், பவானி ஒன்றிய செயலாளர் யுவராஜ் கவுந்தப்பாடி நகர் இளைஞரணி செயலாளர் ஹரி , பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பாளர் முரளி, கொங்குநாடு மக்கள் பேரவை பொறுப்பாளர் கவுந்தி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கோபியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் செல்வகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் நகர தலைவர் மணிகண்டன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பவானியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் ஆட்டோ ரவி, பவானி நகரச் செயலாளர் விஜய், கோவிந்தன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆனந்து ரங்கராஜ் துவக்கி வைத்தார். பெருந்துறை நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நீட் தேர்வினை வரவேற்று ஆர்வத்தோடு கையெழுத்திட்டு சென்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?