கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம்

கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம்
X

கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு கையெழுத்தை பதிவு செய்தார்.

கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக்க கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நேற்று நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேசன் தலைவர் அனூப் தலைமையில், டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு தனது கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானமானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். நிகழ்வில் கோபி தோழமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து கையெழுத்தை பதிவு செய்தனர்.

Tags

Next Story
ai marketing future