ஈரோட்டில் மின்பயனீட்டாளர்களின் குறைதீர் நாள் கூட்டம்

ஈரோட்டில் மின்பயனீட்டாளர்களின் குறைதீர் நாள் கூட்டம்
X

பைல் படம்.

ஈரோட்டில், வரும் ஜன.12-ம் தேதி மின்பயனீட்டாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின்பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜனவரி 12-ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர், வினியோகம், தெற்கு ஈரோடு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலுார், எழுமாத்துார், முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி