ஈரோடு மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்: தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் கோ.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். இதில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தெளிவாக தெரியும்படி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அதன்பிறகு, அவரவர் விரும்பும் மொழிகளில் பெயர் பலகை அமைக்கலாம். எனவே கடைகள், உணவு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு, வணிக சங்கங்களை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu