ஈரோடு மாவட்டத்தில் நவ.29ம் தேதி கடையடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நவ.29ம் தேதி கடையடைப்பு போராட்டம்
X

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்த போது எடுத்த படம்.

வணிக வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து நவ.29ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode Live Updates, Erode Today News, Erode News - வணிக வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து நவ.29ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று (நவ.26) நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வணிக வாடகை கட்டங்களுக்கு வாடகைக்கு 18 சதவீதம் வரி விதிப்பு, தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து நவ.29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் படும் என்றும், தொழில் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு ஜவுளிக்கடை உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதேபோல், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பிலும், நவ.29ம் தேதி கடையடைப்பு நடைபெறுகிறது. ஈரோடு பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளன. இதில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம், ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம், இப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!