கோயில் விரதகாலம் - புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் வர்த்தக சரிவு
கார்த்திகை மாதத்தில் செம்மறி மற்றும் வெள்ளாடு விற்பனை சரிந்தது
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய கால்நடை வர்த்தக மையமான புன்செய் புளியம்பட்டி சந்தையில் வர்த்தகம் கணிசமாக சரிந்துள்ளது. வழக்கமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள் பெருமளவில் கால்நடைகளை வாங்கிச் செல்லும் இச்சந்தையில், சபரிமலை உள்ளிட்ட கோயில்களுக்கான விரதகாலம் தொடங்கியுள்ளதால் வர்த்தகம் மந்தமாகியுள்ளது.
கடந்த வாரம் வரை ரூபாய் 30 முதல் 50 லட்சம் வரை நடந்த வர்த்தகம், இந்த வாரம் வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு சரிந்துள்ளது. சபரிமலை சீசன் மற்றும் மார்கழி மாத விரதங்கள் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செம்மறி மற்றும் வெள்ளாடுகளே சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வியாபாரிகளின் கூற்றுப்படி, சபரிமலை, மேல்மருவத்தூர், பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் ஆட்டிறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. எனினும், கால்நடை வளர்ப்பாளர்கள் சிலர் செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை வாங்கிச் சென்றுள்ளனர், இது எதிர்கால வர்த்தகத்திற்கான முதலீடாக கருதப்படுகிறது. இந்த மந்தநிலை விரதகாலம் முடியும் வரை தொடரும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu