அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்

அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்
X

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

அந்தியூர் தேர்வீதியில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றில் சேதமானதால், புதிதாக சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், அந்தியூர் தேர்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை, வெயிலால் பாதிக்காமல் இருக்க, தேரை சுற்றிலும் தகரத்தாலான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் தேரை சுற்றி அமைக்கப்பட்ட தகர கொட்டகை சாய்ந்து சேதமடைந்தன.மேலும் கொட்டகைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட கான்கிரீட் திட்டுக்களும் சேதமடைந்தன.

இதையடுத்து, சாய்ந்த கொட்டகையை அகற்றி, தேரைச் சுற்றி சுவர் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 2 தினங்களாக தகரத்தை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!