கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சாரதா மாரியம்மன்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாரதா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (5ம் தேதி) இன்று பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 11ம் தேதி புதன்கிழமை அன்று திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.16ம் தேதி மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடைபெற உள்ளது. 17ம் தேதி மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும், பட்டுபோர்த்தி ஆடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, 18ம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், இரவு 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .19ம் தேதி காலை 7 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் ,9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதலும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.அதைத் தொடர்ந்து அக்கினி அபிஷேகம், பெரிய பூஜை, பக்தர்கள் அக்னி கும்பம் எடுத்து வருதல், அலகு குத்துதல் ஆகியவை நடைபெற உள்ளன. அன்று இரவு 8 மணி அளவில் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20,21ம் தேதிகளில் மஞ்சள் நீர் உற்சவம், 21ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது