ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்
X

ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7-ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுக ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது இரட்டை இலை சின்னத்தை கோரி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் செந்தில் முருகன் விருப்ப மனுவும் அளித்தார். முன்னதாக, ஈரோட்டில் ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசியதாவது, பாஜக, வேட்பாளரை அறிவித்தாலும், நாங்கள் வாபஸ் பெற மாட்டோம். எங்களது வேட்பாளரை வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செந்தில் முருகன் தான். ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்தாலும், எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் தான். எங்கள் வேட்பாளரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்