அந்தியூரில் கஞ்சா விற்றவர் கைது

அந்தியூரில் கஞ்சா விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட ரங்கநாதன்

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுக்காடு மந்தை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (62). கூலி தொழிலாளியான இவர், கஞ்சா விற்பனை செய்து வருவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மேற்பார்வையில், மந்தை பகுதியில் அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மந்தையில் உள்ள அவரது வீட்டருகே கஞ்சா விற்பனை செய்த கொண்டிருந்தபோது, ரங்கநாதனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து, ரங்கநாதனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story