பவானியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பவானியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்  ஹாரன்கள் பறிமுதல்
X

பவானி பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தார்

பவானி பேருந்து நிலையத்தில் நடத்திய சோதனையில் 40 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏர் ஹாரன் களை பறிமுதல் செய்தனர்

ஈரோடு மாவட்டம், பவானி பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பவானி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அலுவலர்கள் பவானி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



இதில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உள்ள ஹாரன்களை சோதனை செய்து டிசிஎம்எல் அளவு அதிகமாக உள்ள பைப் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் ஏற்படும் இடையூறு குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் பொதுமக்களும் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!