ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 472 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 472 வாகனங்கள் பறிமுதல்
X

பைல் படம்.

பறிமுதல் செய்யப்பட்ட உரிய ஆவணங்களை காண்பித்து வாகனங்கள் பெற்று செல்ல போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகர குற்றப்பிரிவு, ஈரோடு வடக்கு, தெற்கு, கருங்கல்பாளையம், ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி, பவானி, சித்தோடு, சத்தியமங்கலம், பங்களாபுதூர், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி, சிவகிரி மற்றும் மலையம்பாளையம் போலீஸ் நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இதுவரை 472 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக இந்த வாகனங்களுக்கு உரிமையாளர்கள் உரிமை கோராமல் கேட்பாரற்று உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த வாகனங்களில் உரிமையாளர்கள் வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 472 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அவற்றின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து தங்களுடைய வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!