திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள். 

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த தோரணவாவி கிராமத்தில் கெட்டிசெவியூர்-சிறுவலூர் சாலையில் திங்களுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 டிப்பர் லாரி வந்தது. லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 2 லாரிகளிலும் தலா 3, யூனிட் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியை ஓட்டி வந்த குன்னத்தூர், கந்தம்பாளையம், வெட்டையன்கிணறு பகுதியைச் சேர்ந்த நவநீதன் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல் (வயது 55) போலீசார் கைது செய்தனர்‌. மேலும், லாரி உரிமையாளர்களான குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 26), கோகிலா (வயது 29) ஆகியோர் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future