நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் சீமான்

நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் சீமான்
X

கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கோபிசெட்டிபாளையத்தில் நடந்த, ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூறியதாவது:

மின் விநியோகம், சாலை பராமரிப்பு போன்றவற்றை மத்திய அரசு எடுத்துக்கொள்வது சரியா?. சரக்கு மற்றும் சேவை வரி என மொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்து கொள்வது சரியா?. பேரிடர் காலங்களில் கூட 500 கோடி, 1000 கோடி கேட்டு பிச்சை எடுக்க வேண்டி உள்ளது. இது தான் மாநில உரிமையா? . உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்எல்ஏவை அப்பகுதி பொதுமக்கள் சாணியை எறிந்து விரட்டியது மிகவும் குறைவு. இதற்கு முன்பு மருத்துவத்தில் இருந்த நுழைவுத்தேர்வு என்பது வேறு. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு என்பது தகுதி தேர்வு. மருத்துவ படிப்பிற்கான தகுதியை நீட் தேர்வு தான் தீர்மானிக்கும் என்றால் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை ஏன் படிக்க வேண்டும்.

நேரிடையாக நீட் தகுதி தேர்வு பாடதிட்டத்தையே படிக்க வைக்க வேண்டியது தானே?. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்ததை தடை செய்தது ஏற்புடையது இல்லை. நீதிபதிகள் அந்த காட்டை பார்த்தனரா? நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் யாராவது நீதிபதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனரா? அவர்கள் குழந்தைகள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உள்ளனரா?.உண்மையில் நீட் தேர்வு என்ன என்பதை விளக்கி பேசுவார்களா? ஒரு பக்கத்திற்கு நீட் தேர்வால் என்னென்ன நன்மை உள்ளது என்பதை கூற முடியுமா? வழக்கு போட்டவர்கள், வாதிட்டவர்கள் தர்க்கத்தை வைத்து தான் நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கின்றனர்.

இதனால் வரும் நன்மை தீமைகள் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. வாகன போக்குவரத்து தடையால் விவசாயிகள் பாதிக்கப்படும் என்றால் அந்த சட்டம் எதற்கு?. விளை பொருட்களை தலைச்சுமையாகவா கொண்டு செல்வார்கள்?. இவ்வளவு நாட்களாக வாகனம் மூலமாக காய்கறி கொண்டு சென்ற போது எவ்வளவு புலிகள் பாதிக்கப்பட்டது?. நீதிபதிகள் தரையில் கால் வைப்பதில்லை. விண்ணில் இருந்து வரும் தேவ தூதர்கள் போல் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு, கோபிசெட்டிபாளையத்தில் நடந்த 'நாம் தமிழர்' கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!