ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்..!

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்..!

ஈரோடு எஸ்.கே.சி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், ரோஜா பூக்களை கொடுத்தும் வரவேற்றனர்.

ஈரோட்டில் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோட்டில் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பழைய மற்றும் புதிய மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு காலை முதலே புறப்பட்டு சென்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மாதிரி பள்ளியில் இன்று பள்ளிக்கு வரும் மாணவிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவு தனியாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக இன்று பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மேளம், தாளம் முழங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை வரவேற்றனர். மேலும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அவர்களை பள்ளிக்கு வரவேற்றனர்.

இதனையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

Tags

Next Story