கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்
X

கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியர் விஜயலட்சுமி.

கீழ்வாணி இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பார்வையாளராக ஆசிரியர் பயிற்றுநர் செல்வராஜ் பங்கேற்றார்.


2 ஆண்டுகளுக்கு ஒரு முறை குழு மாற்றி அமைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக சந்திரா , துணைத் தலைவராக சுகுணா மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


பதவியேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஓய்வு பெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ் வரவேற்றார். மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி மற்றும் புஷ்பா ஆகியோர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!