சத்தியமங்கலம் புலிகள் காப்பக பழங்குடியின மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் மாலை நேர படிப்பகங்கள்
பீக்கிரபாளையத்தில் நடத்த மாலை நேர படிப்பகம்.
சுடர் அமைப்பானது வனத்துறையுடன் இணைந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக பழங்குடியின மாணவர்களின் திறன்களை மாலை நேர படிப்பகங்கள் மூலம் மேம்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனக்கோட்டம் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 20 பழங்குடி கிராமங்களில், பழங்குடி குழந்தைகளுக்கான மாலை நேர படிப்பகங்களை சுடர் அமைப்பானது வனத்துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. சுமார் 400 குழந்தைகள் பயில்கின்றனர்.
தினமும் மாலை இரண்டு மணி நேரம் இந்த மையங்களில் கல்வி போதிக்கப்படுகிறது. பள்ளி இடைநிற்றலை தடுத்திடவும், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்கப்படுத்தவும், இக்குழந்தைகளின் கற்றல் அடைவு திறன்களை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை மேம்படுத்தவும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கதை சொல்லல் நிகழ்வு சுடர் அமைப்பின் சார்பாக பீக்கிரிபாளையம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. கதை சொல்லி தீரா தேன்மொழி பங்கேற்று குழந்தைகளை ஈர்க்கும் கதைகளை கூறினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு கதைகள் அடங்கிய சிறு நூல்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் சூழல் மேம்பாட்டு சரகத்தின் வனச்சரக அலுவலர் இந்துமதி, வனவர் சத்யா, சுடர் அமைப்பின் இயக்குநர் எஸ்.சி நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu