ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்

ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்
X

கிரைம் செய்திகள் (பைல் படம்).

சத்தியமங்கலம் அருகே தொழிலாளி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே தொழிலாளி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை:-

சத்தியமங்கலம் அடுத்துள்ள ரங்கசமுத்திரம், அண்ணா நகரை சேர்ந்தவர் ஆண்டவன் (60), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆண்டவனுக்கு சமீபகாலமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.‌ வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வந்த ஆண்டவன் கடந்த 14ம் தேதி பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பிறகு குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று சத்திய மங்கலம் ஆத்துப்பாலம் மீன்கடை அருகே மரத்தில் நைலான் கயிற்றால் ஆண்டவன் தூக்கிட்டுக் கொண்டார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சத்தியமங்கலம் அடுத்துள்ள வரதம்பாளையம், தொப்பூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (31). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ட்ரிங் வேலை செய்து வந்த வெங்கடேசனுக்கு பல ஆண்டுகளாக வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை மதிப்பீட்டாளர் வீட்டில் 8 பவுன் கொள்ளை:-

பெருந்துறை ஜீவா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (27). இவர் பெருந்துறை குன்னத்தூர் சாலையில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். பொங்கலையொட்டி, அன்பழகன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் வந்து பார்த்த போது, வீட்டின் கேட் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப் பட்டிருந்த செயின், கம்மல், ஜிமிக்கி உள்பட 8 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பெருந்துறை போலீசில் அன்பழகன் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!