ஆப்பக்கூடல் அருகே நடந்த சாலை விபத்தில் சாக்கு வியாபாரி உயிரிழப்பு

ஆப்பக்கூடல் அருகே நடந்த சாலை விபத்தில் சாக்கு வியாபாரி உயிரிழப்பு
X

பைல் படம்

ஆப்பக்கூடல் அருகே நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த சாக்கு வியாபாரி வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது42) சாக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் ஆப்பக்கூடல் வழியாக சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வந்த போது மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து உள்ளார்.

இதை சிறிதும் எதிர்பாராத வெங்கடேஷ் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில் பலத்த இரத்த காயமடைந்து கிடந்துள்ளார்.சாலையில் சென்றவர்கள் வெங்கடேஷை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெங்கடேஷின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றனர்,தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா