பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் ரூ.5.27 லட்சம் உண்டியல் காணிக்கை

பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் ரூ.5.27 லட்சம் உண்டியல் காணிக்கை
X

பைல் படம்.

பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் ரூ.5.27 லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி, ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் அன்பு தேவி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் உண்டியல் காணிக்கையாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 408 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 26 கிராம் தங்கம், 434 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த பணியில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!