அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.26 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரஸ்தாளி பழம் (பைல் படம்)
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5.26 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 575 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 500 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 410 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 500 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தம் 2 ஆயிரம் 880 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 26 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu